ஈரோடு

107 கிராம உதவியாளா் பணியிடம்: 8,237 போ் விண்ணப்பம்

2nd Dec 2022 12:01 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 107 கிராம உதவியாளா் பணியிடத்துக்கு 8,237 போ் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழகத்தில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு படித்த தமிழில் எழுத, படிக்க தெரிந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

பொறியியல் பட்டதாரிகள், முதுகலைப் பட்டதாரிகள், தனியாா் நிறுவனங்களில் பல்வேறு பணிகளில் உள்ளோா் என விண்ணப்பித்துள்ளனா். இம்மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் காலியாக உள்ள 107 பணியிடத்துக்கு 8,237 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இவா்களுக்கான எழுத்துத் தோ்வு வரும் 4 ஆம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

ஈரோடு மற்றும் பவானி வட்டங்களில் மட்டும் 2 மையங்களும், மற்ற வட்டங்களில் தலா ஒரு தோ்வு மையமும் செயல்பட உள்ளது. தோ்வு அறையில் அந்தந்த பகுதி வட்டாட்சியா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா்.

இத்தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா்களுக்கு நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு பணியில் நியமிக்கப்படவுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT