ஈரோடு

கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கடம்பூா் மலைப் பகுதியில் கஞ்சா பயிரிட்ட விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதி கூட்டாா்தொட்டி கிராமத்தில் கஞ்சா பயிரிடப்படுவதாக கடம்பூா் போலீஸாருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு விவசாயி பழனிசாமி என்பவரது தோட்டத்தில் சோதனை செய்தபோது, மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விளை நிலத்தில் ஊடுபயிராக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததை போலீஸாா் கண்டுபிடித்தனா்.

இதையடுத்து, பழனிசாமியை கைது செய்த போலீஸாா், அங்கிருந்த கஞ்சா செடிகளை அழித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT