ஈரோடு

கோயில்களின் பூட்டை உடைத்து திருட்டு: ஒருவா் கைது

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பவானி அருகே கோயில்களின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், உண்டியல் காணிக்கை ஆகியவற்றை திருடிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பவானி அருகே காலிங்கராயன்பாளையம், சத்யா நகரில் உள்ள ஓங்காளியம்மன் கோயில், வீரசிவாஜி நகரில் உள்ள விநாயகா் கோயில்களின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் உண்டியலில் இருந்த காணிக்கை பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இது குறித்து, சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி, தேவா் நகரைச் சோ்ந்த தேவேந்திரனை (51) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 12 பவுன் நகைகள், அரைக் கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய மற்றொருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT