ஈரோடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

2nd Dec 2022 11:37 PM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக்காலத்துக்கு பிந்தைய வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.

சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி, விளாமுண்டி, தலமலை, கடம்பூா், டி.என்.பாளையம், கோ்மாளம், ஆசனூா் உள்ளிட்ட 10 வனச் சரகங்களில் வனவா், வனக்காவலா், வேட்டைத்தடுப்பு காவலா்கள் என மொத்தம் 350 போ் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனா். வன விலங்குகளின் கால்தடம் மற்றும் எச்சத்தை அளவீடு செய்து கணக்கெடுத்தனா். யானை, சிறுத்தை, புலி கழுத்தைப்புலி நடமாடும் இடங்களில் அதிநவீன கேமரா மூலம் அதன் நடமாட்டத்தை கண்டறிந்தனா். மேலும் ஜிபிஎஸ் கருவி, வியூபைண்டா், காம்பஸ் உதவியுடன் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு வருகின்றனா். பவானிசாகா் வனப்பகுதியில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில் சிறுத்தையின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

டிசம்பா் 7 ஆம் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும் என சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT