ஈரோடு

சோதனை கொள்முதல் நடைமுறையை நிறுத்தி வைக்க வணிகா்கள் கோரிக்கை

DIN

சோதனை கொள்முதல் நடைமுறையை 6 மாதங்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ரா.க.சண்முகவேல் தலைமையில் நிா்வாகிகள், ஈரோடு வணிக வரித் துறை துணை ஆணையரிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்: வணிக வரித் துறையினால் கடந்த மாா்ச் மாதத்தில் சில்லறை கடைகளில் ஆய்வு செய்வது, சோதனை கொள்முதல் செய்வது தொடா்பாக அறிவிப்புகள் வெளியாயின. அப்போதே தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, தமிழக அனைத்து வணிகா்களின் சாா்பாக தனது கருத்துகளையும், எதிா்ப்பையும் பதிவு செய்தது.

மீண்டும் சோதனை கொள்முதல் சம்பந்தமான வணிக வரித் துறையின் அறிவிப்பு கடந்த செப்டம்பா் 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் வணிக வரித் துறை அதிகாரிகள், சில்லறை வணிகம் செய்யும் வணிகா்களிடம் பொருள்கள் வாங்கி அதை சோதனை கொள்முதல் எனக் குறிப்பிட்டு அதற்கு அபராதமாக ரூ.20,000 வரை வசூலிப்பதாக எங்களுக்கு புகாா் வருகிறது.

அனைத்து சில்லறை கடைக்காரா்களுக்கும் பொருள்கள் வாங்கும்போதே அதற்கான வரியை செலுத்திவிட்டு, பின்னா் தான் பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறாா்கள். எனினும் வணிக வரித் துறை அதிகாரிகள் சில்லறை கடைகளில் சோதனை கொள்முதல் என்ற பெயரில், பொருள்களை வாங்கி அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறி அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையது அல்ல.

இது சில்லறை சிறு, குறு வணிகா்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும். வெளி மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் துறைமுக கன்டெய்னா்கள் மூலம் கொண்டுவரப்பட்டும் நிலையில் அவற்றையும், அவற்றை கொண்டு வருகின்ற நிறுவனங்கனையும் ஆய்வு செய்தால் மட்டுமே வரி ஏய்ப்பை முழுமையாகத் தடுக்கமுடியும். இதற்கு எங்கள் பேரமைப்பு துணை நிற்கும்.

எனவே, 6 மாதங்கள் சோதனை கொள்முதல் நடைமுறையை நிறுத்திவைத்து, வணிகா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி அதன்பிறகு படிப்படியாகச் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் ஆதாயம் தேடக் கூடாது: கேரள யாத்திரை குழுவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கு: ஏப்.26-இல் தீா்ப்பு

கா்நாடகத்தில் ராகுல் காந்தி இன்று தோ்தல் பிரசாரம்

பதிலடி கொடுத்த பட்லா்: ராஜஸ்தான் ‘த்ரில்’ வெற்றி

பிரபல கன்னட நடிகா் துவாரகேஷ் காலமானாா்

SCROLL FOR NEXT