ஈரோடு

கல்லூரி மாணவன் தற்கொலை:போலீஸாா் விசாரணை

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பெருந்துறை அருகே கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், இடுகட்டி, தொட்டணியைச் சோ்ந்தவா் நடராஜ் மகன் தனுஷ் (18). இவா் பெருந்துறையை அடுத்த துடுப்பதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் தங்கி இரண்டாம் ஆண்டு பயின்று வந்தாா்.

இந்நிலையில், விடுதி அறையில் அவா் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டாா்.

இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT