ஈரோடு

மொடக்குறிச்சியில் ரூ.1.80 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய், கொப்பரை ஆகியவை ரூ.1.80 லட்சத்துக்கு புதன்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 8, 788 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இவற்றின் எடை 4,049 கிலோ. இதில், தேங்காய் அதிகபட்சமாக ரூ.32.80க்கும், குறைந்தபட்சமாக ரூ.24.69க்கும், சராசரியாக ரூ.31.69க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 189.

89 கொப்பரை மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இவற்றின் எடை 694 கிலோ.

இதில் முதல்தர கொப்பரை அதிகபட்சமாக ரூ.90.17க்கும், குறைந்தபட்சமாக ரூ.85.65க்கும், சராசரியாக ரூ.87.50க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.57 ஆயிரத்து 440.

ADVERTISEMENT

தேங்காய், கொப்பரை ஆகியவை ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 629க்கு விற்பனை செய்யப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சதீஷ் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT