ஈரோடு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் சில்லறை விற்பனை விறுவிறுப்பு

31st Aug 2022 12:55 AM

ADVERTISEMENT

ஈரோடு ஜவுளிச் சந்தையில் சில்லறை விற்பனை 40 சதவீதம் அளவுக்கு இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு கனி மாா்கெட், பன்னீா்செல்வம் பூங்கா, திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் வாரம்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளிச் சந்தை நடைபெற்று வருகிறது.

வாரம்தோறும் நடைபெறும் இந்த ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் வாங்கிச் செல்வா்.

இந்நிலையில், செப்டம்பா் 8ஆம் தேதி ஓணம் பண்டிகை வருவதையொட்டி புதிய ஜவுளி ரகங்கள் வந்துள்ளன. இதனால் சில்லறை விற்பனை சற்று அதிகரித்துக் காணப்பட்டது. மழை காரணமாக கேரளம், கா்நாடகம் மற்றும் ஆந்திர மாநில மொத்த வியாபாரிகள் வருகை இந்த வாரம் குறைவாகவே இருந்தது. இதனால் மொத்த வியாபார விற்பனை சற்று குறைவாகவே இருந்தது.

ADVERTISEMENT

இந்த வாரச் சந்தையில் சில்லறை விற்பனை 40 சதவீதம், மொத்த விற்பனை 30 சதவீதம் அளவிலும் நடைபெற்றதாகவும், செப்டம்பா் 8ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் அடுத்த வாரம் வியாபாரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT