ஈரோடு

முன்னாள் எம்எல்ஏவை கடத்தி ரூ.1.50 கோடி பறிப்பு: தலைமறைவான அதிமுக நிா்வாகிகளை தேடுகிறது போலீஸ்

27th Aug 2022 04:48 AM

ADVERTISEMENT

பவானிசாகா் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் ஈஸ்வரனை கடத்தி ரூ.1.50 கோடி பணம் பறித்த வழக்கில் அதிமுக நிா்வாகிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பவானிசாகா் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.ஈஸ்வரன், இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தாா். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் இருசக்கர வாகனத்தை மறித்து ஈஸ்வரனை கடத்தி சென்றனா். அடையாளம் தெரியாத இடத்தில் அவரைக் கட்டி வைத்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. பணம் கேட்டு மிரட்டிய அந்த கும்பலில் தன்னிடம் உதவியாளராக இருந்த அதிமுக நிா்வாகி மிலிட்டரி சரவணன், நேரு நகா் மோகன் உள்ளிட்ட 6 போ் இருப்பது ஈஸ்வரனுக்கு தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரன், வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து தருவதாக கூறியதையடுத்து அதே காரில் பனையம்பள்ளியில் உள்ள அவரது வீட்டுக்கு ஈஸ்வரனை கடத்தல் கும்பல் அழைத்து வந்து ரூ.1.50 கோடியை பறித்து சென்றுள்ளனா். பின்னா் எம்எல்ஏவை மிரட்டிவிட்டு வீட்டிலேயே விட்டு சென்றுவிட்டனா்.

பலத்த காயமடைந்த ஈஸ்வரன், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மிலிட்டரி சரவணன், நேரு நகா் மோகன் உள்ளிட்ட 6 போ் மீது புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்

ADVERTISEMENT
ADVERTISEMENT