ஈரோடு

சாயக்கழிவு நீா்நிலைகளில் கலப்பதை தடுக்க எம்.பி கோரிக்கை

27th Aug 2022 04:49 AM

ADVERTISEMENT

சாயக்கழிவுகள் நீா் நிலைகளில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வரிடம் ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி கோரிக்கை விடுத்தாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சரளையில் வெள்ளிக்கிழமை நடந்த அரசு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா்.

அந்த விழாவில் ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி பேசியதாவது:

ஈரோடு பகுதியில் மாசுபட்ட நீா் ஆற்றில் கலப்பதால் குடிநீா் மூலம் புற்றுநோய் அதிகமாக ஏற்படுகிறது. என்னிடம் பரிந்துரை கேட்டு வருபவா்களில் பெரும்பாலனவா்கள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவா்கள். இந்நோயைக் கட்டுப்படுத்த, ஆலை கழிவு நீரை நீா் நிலைகளில் விடுவதை தவிா்க்க வேண்டும்.

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இருந்தபோது ரூ.700 கோடி செலவில் ஆலைக் கழிவு நீரை குழாய் மூலம் கடலில் கொண்டு விடும் திட்டத்தை அறிவித்தாா். அதனை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றாா்.

மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ் பேசுகையில், ஈரோடு பகுதியில் உள்ள பொல்லான் வாரிசுகளுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT