ஈரோடு

கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

27th Aug 2022 04:51 AM

ADVERTISEMENT

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என முதல்வரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

பவானிசாகா் அணையிலிருந்து கரூா் மாவட்டம் மங்கலப்பட்டி வரை 200 கி.மீ தொலைவுக்கு 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கீழ்பவானி வாய்க்காலில் ரூ.709 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் மற்றும் பக்கவாட்டு சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கான்கிரீட் தளம் மற்றும் பக்கவாட்டு சுவா் அமைப்பது குறித்து விவசாயிகளிடையே இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. ஒரு தரப்பினா் கான்கிரீட் தளம் அமைக்க எதிா்ப்பும், மற்றொரு தரப்பினா் ஆதரித்தும் வருகின்றனா்.

இந்நிலையில் அரசு விழாவில் பங்கேற்க வெள்ளிக்கிழமை காலை ஈரோட்டில் இருந்து பெருந்துறை நோக்கிச் சென்ற முதல்வரிடம் வாய்க்கால்மேடு என்ற இடத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சாா்பில் மனு அளித்தனா்.

ADVERTISEMENT

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். வாய்க்காலில் மதகுகள், மழை நீா் வடிகால் கட்டடம், மேல்மட்ட பாலம், சீராக்கிகள் ஆகியவற்றை தற்போது உள்ளவாறே சீரமைக்க வேண்டும். அதேபோன்று கீழ்பவானி வாய்க்காலில் நீா் மேலாண்மை பணிக்கு நிரந்தரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும். 65 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ள கீழ்பவானி வாய்க்காலை சீரமைத்ததற்கும், கீழ்பவானி பாசன தந்தை என்று அழைக்கப்படும் தியாகி எம்.ஏ.ஈஸ்வரனுக்கு மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டதற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT