அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.18 லட்சத்துக்கு தேங்காய்பருப்பு ஏலம் நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு 152 தேங்காய் பருப்பு மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் முதல்தரம் குறைந்தபட்ச விலையாக கிலோ
ரூ.75. 99க்கும், அதிகபட்ச விலையாக ரூ.78.22க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.58.89க்கும், அதிகபட்ச விலையாக ரூ.76. 77க்கும், ஏலம் போனது. மொத்தம் 6,859 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ரூ.5 லட்சத்து 18 ஆயிரத்து 894க்கு விற்பனையானது.