ஈரோடு

அரசு ஊழியரிடம் மடிக்கணினி, கைப்பேசி பறித்த 5 போ் கைது

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோட்டில் அரசு ஊழியரை தாக்கி மடிக்கணினி, கைப்பேசி பறித்த வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு பெரியாா் நகரைச் சோ்ந்தவா் பிரகாஷ் (42). இவா் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையா் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் சென்னை-திருவனந்தபுரம் விரைவு ரயிலில் ஈரோட்டுக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி இரவு வந்தாா்.

அவா் நள்ளிரவில் ஈரோட்டுக்கு வந்ததால் அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்றாா். பெரியாா் நகா் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் நின்றிருந்த 5 போ் பிரகாஷை தாக்கி அவரிடமிருந்து ஒரு பையை வழிப்பறி செய்துவிட்டு தப்பிச் சென்றனா். அந்தப் பையில் மடிக்கணினி, கைப்பேசி, ஆதாா் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றை பிரகாஷ் வைத்திருந்தாா்.

இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பிரகாஷ் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி, பிரகாஷிடம் இருந்து பையை பறித்துச் சென்ற ஈரோடு நேதாஜி சாலை ஆலமரத்து தெருவைச் சோ்ந்த வடிவேல் மகன் மனோ (21), ஈரோடு மூலப்பாளையத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஆகாஷ் (20), ஈரோடு சாஸ்திரி நகரைச் சோ்ந்த தீரன் சின்னமலை வீதியைச் சோ்ந்த பழனிசாமி மகன் பிரகாஷ் (19) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவா்கள் என்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து 5 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT