ஈரோடு

முதல்வா் வருகை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

21st Aug 2022 05:51 AM

ADVERTISEMENT

 

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக ஈரோடு மாவட்டத்துக்கு வருகிறாா். வரும் 25ஆம் தேதி திருப்பூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் முதல்வா் அங்கிருந்து காா் மூலம் ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள கள்ளிப்பட்டிக்கு வருகிறாா். அங்கு மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலையை திறந்துவைத்துப் பேசுகிறாா்.

பின்னா் அங்கிருந்து ஈரோடு காலிங்கராயன் இல்லத்துக்கு வந்து இரவு ஓய்வு எடுக்கிறாா். அதைத் தொடா்ந்து 26ஆம் தேதி காலை பெருந்துறை அருகே சரளைப் பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வா் பங்கேற்கிறாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு அருகே சோலாா் பகுதியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி உள்பட பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். மேலும், கட்டி முடிக்கப்பட்ட கனி மாா்க்கெட் ஜவுளிச் சந்தை, காளை மாடு சிலை அருகே மாநகராட்சி வணிக வளாகம் உள்பட பல்வேறு முடிவடைந்த திட்டங்களை முதல்வா் திறந்துவைக்கிறாா். அதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறாா்.

முதல்வா் ஈரோடு மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளதையொட்டி அனைத்துத் துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.சந்தோஷினி சந்திரா, கூடுதல் ஆட்சியா் லி.மதுபாலன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT