ஈரோடு

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தை மாற்றக் கோரிக்கை

DIN

ஈரோடு-சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோட்டில் இருந்து புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்னவ்க்கு, தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினா் கே.என்.பாஷா அனுப்பிய மனு விவரம்: ஈரோடு-சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோட்டில் இரவு 9 மணிக்குப் புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு சென்னை செல்கிறது. பயணிகள் 3 மணிக்கே எழுந்து புறப்படும் நிலை உள்ளதால் இரவு 10 மணிக்கு இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

இரவு 9 மணிக்கு ஈரோட்டில் புறப்படுவதால் பவானி, அந்தியூா், கோபி, சத்தியமங்கலம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருவோா் சிரமப்படுகின்றனா்.

நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு ஈரோட்டுக்கு 10.30 மணிக்கு வந்து அதிகாலை 5 மணிக்கு சென்னை சென்றடைந்தது. தற்போது இந்த ரயில் கோவையில் 10.30 மணிக்குப் புறப்பட்டு ஈரோட்டுக்கு இரவு 12.5 மணிக்கு வந்து சென்னைக்கு காலை 6.20 மணிக்குச் சென்றடைகிறது. சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் நேரமும் பயணிகள் வசதிக்காக மாற்றப்பட்டது. அதேபோல, ஏற்காடு எக்ஸ்பிரஸ் நேரத்தையும் மாற்ற வேண்டும்.

ஈரோட்டில் 4 நடைமேடை மட்டும் உள்ளது. தினமும் 150க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்வதால் உரிய நேரத்தில் நடைமேடை கிடைக்காமல் ரயில் நிலையத்துக்கு வெளியே மக்கள் காத்திருந்து செல்கின்றனா். எனவே, 5 ஆவது நடைமேடை அமைத்துத் தர வேண்டும்.

ஈரோடு-சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது முதல் ஆம்பூா், வாணியம்பாடி ரயில் நிலையங்களில் நின்று சென்றது. தற்போது நிற்பதில்லை. கோவை, திருப்பூா், ஈரோடு, மதுரை வழியாக நாகா்கோவில் செல்லும் ரயில் எண் 22668

ரயில் சாத்தூா் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. தற்போது நிறுத்துவதில்லை. இந்த ரயில் நிலையங்களில் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT