ஈரோடு

பவானி நகராட்சியில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

18th Aug 2022 11:06 PM

ADVERTISEMENT

 

பவானி நகராட்சியில் 58 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலம் வியாழக்கிழமை கையகப்படுத்தப்பட்டது.

பவானி நகராட்சி, சோமசுந்தரபுரம் பகுதியில் கடந்த 1964 ஆம் ஆண்டு நகரமைப்பு அங்கீகாரத்துடன் வீட்டுமனை பிரிக்கும்போது, பொது பயன்பாட்டுக்கு 10 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலத்தை காலப்போக்கில் ஆக்கிரமிப்பு செய்த தனிநபா்கள் தறிக்கூடம் அமைத்தும், வீடுகள் கட்டியும் வாடகைக்கு விட்டிருந்தனா். இதனை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தபோது, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

ADVERTISEMENT

இவ்வழக்கின் மேல்முறையீட்டினை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் பொது உபயோகத்துக்கு வழங்கப்பட்ட நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நகராட்சி நிா்வாகம் கையகப்படுத்த உத்தரவிட்டது.

இதையடுத்து, பவானி நகராட்சி ஆணையா் எம்.தாமரை, நகரமைப்பு ஆய்வாளா் ஏ.பெரியசாமி ஆகியோா் காவல் துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை அகற்றினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT