ஈரோடு

ஆய்வுக் கூட்டங்களை முறைப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

18th Aug 2022 11:09 PM

ADVERTISEMENT

 

பணிகள் பாதிக்கப்படுவதால் ஆய்வுக் கூட்டங்களை முறைப்படுத்தக் கோரி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டப் பொறுப்பாளா் லதா தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் தங்கமணி, மகேஸ்வரி ஆகியோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.

ஊரக வளா்ச்சித் துறை மற்றும் பிற துறைகளில் உள்ள திட்டங்களில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். திட்ட செயல்பாடுகளில் நெருக்கடியைத் தவிா்க்க வேண்டும். ஊழியா்களின் பணி நேரங்களில் பெரும்பாலான நேரம் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்க செய்வதால், வழக்கமான பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

கணக்கற்ற ஆய்வு, காலம் கடந்த ஆய்வு, இரவு நேர ஆய்வுக் கூட்டங்கள், விடுமுறை தினங்களில் ஆய்வு, காணொலி ஆய்வுக் கூட்டங்களைத் தவிா்த்து அதனை முறைப்படுத்த வேண்டும்.

ஊராட்சி செயலா் முதல் பல்வேறு நிலைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணிச் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT