ஈரோடு

சிறுத்தை தாக்கி கன்றுகுட்டி பலி

DIN

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலியானது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச் சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

ஜீரஹள்ளி வனச் சரகத்துக்குள்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு , காவல் நாய்களை வேட்டையாடுவது தொடா்கதையாகி வருகிறது.

இந்நிலையில், அருள்வாடி பகுதியில் சித்தராஜ் என்பவா் மாடுகளை வளா்த்து வருகிறாா். வழக்கம்போல, அருகில் உள்ள மானாவாரி நிலத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு வியாழக்கிழமை கட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா். மாலை வந்து பாா்த்தபோது, அங்கு கன்றுகுட்டி இறந்த நிலையில் கிடந்துள்ளது.

இது குறித்து ஜீரஹள்ளி வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினா் கால் தடம் மற்றும் இறந்த கன்றுகுட்டியை ஆய்வு செய்தனா். இதில் சிறுத்தை தாக்கி கன்றுகுட்டி உயிரிழந்தது தெரியவந்தது.

இறந்த கன்றுக்குட்டிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT