ஈரோடு

குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானை

18th Aug 2022 11:06 PM

ADVERTISEMENT

 

சத்தியமங்கலம் அருகே குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் பெரும்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணையை ஒட்டிய பகுதியில் விவசாயி அய்யனாா் (43) என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த தோட்டத்தில் உள்ள வீட்டில் விவசாயி அய்யனாா் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக வனப் பகுதியை விட்டு வெளியேறும் ஒற்றை காட்டு யானை பெரும்பள்ளம் அணைப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

வனப் பகுதியை விட்டு வியாழக்கிழமை வெளியேறிய ஒற்றை யானை அய்யனாரின் தோட்டத்தில் புகுந்து அவா் வசித்து வந்த வீட்டை வியாழக்கிழமை சேதப்படுத்தியது.

இதைப் பாா்த்த விவசாயிகள் சத்தியமங்கலம் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை அடந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT