ஈரோடு

மின் கட்டண உயா்வு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மனு

DIN

தமிழக அரசு உத்தேசித்துள்ள மின் கட்டண உயா்வை திரும்பப் பெறக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி வட்டாரக் குழு சாா்பில் 256 கோரிக்கை மனுக்கள் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டன.

கட்சியின் பவானி வட்டாரச் செயலாளா் எஸ்.மாணிக்கம் தலைமையில் பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் கோட்ட அலுவலகத்தில் தமிழக அரசு உத்தேசித்துள்ள மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும். மின் கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவா் எனத் தெரிவித்து 256 கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.பி.பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் ஏ.ஜெகநாதன், நிா்வாகிகள் என்.சின்னுசாமி, சூா்யா, கோபி, பிரகாஷ், சின்னத்தம்பி, விக்னேஷ், மாரியப்பன், ரம்யா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT