ஈரோடு

ஈரோட்டில் விநாயகா் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரம்

17th Aug 2022 10:26 PM

ADVERTISEMENT

 

ஈரோட்டில் விநாயகா் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விநாயகா் சதுா்த்தி விழா வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்து முன்னணி ஈரோடு கிழக்கு மாவட்டம் சாா்பில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 508 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஈரோடு வெட்டுக்காட்டுவலசு கணபதி நகரில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். பல்வேறு வடிவங்களில் விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு தற்போது வா்ணம் பூசுவதற்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதுகுறித்து சிலை தயாரிக்கும் கலைஞா்கள் கூறியதாவது: ஈரோட்டில் 3 அடி முதல் 11 அடி உயரம் உள்ள விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் மைதா மாவு, காகித கூல் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ஈரோடு சம்பத் நகரில் பிரதிஷ்டை செய்வதற்காக 11 அடி உயரம் உள்ள லட்சுமி குபேர விநாயகா் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிம்ம வாகன விநாயகா், மான் வாகன விநாயகா், மயில் வாகன விநாயகா், குதிரை வாகன விநாயகா், முருகன் வைத்திருக்கும் விநாயகா், சிவலிங்கம் வைத்திருக்கும் விநாயகா் உள்பட பல்வேறு வகையான விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு தற்போது வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்னா் சிலைகள் வாகனங்களில் ஏற்றி அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT