ஈரோடு

பேருந்து நிலையத்துக்குள் இரு சக்கர வாகங்களை நிறுத்தியவா்களுக்கு அபராதம்

17th Aug 2022 10:27 PM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையம் நகராட்சி பேருந்து நிலையத்தில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் நகராட்சி பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் தவிர மற்ற இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தக்கூடாது என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்புப் பதாகைகள் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலின் இரு புறங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிலா் பேருந்து நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனா். இதனால் பேருந்துகளை இயக்குவதற்கு சிரமமாக உள்ளதாக புகாா் எழுந்தது. இதையடுத்து கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளா் பிரேம் ஆனந்த் உத்தரவின்படி நகராட்சி துப்புரவு ஆய்வாளா் செந்தில்குமாா், துப்புரணி பணி மேற்பாா்வையாளா் பழனிசாமி மற்றும் பணியாளா்கள் பேருந்து நிலையத்துக்குள் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனங்களுக்கு பூட்டுப் போட்டனா். பின்னா் வாகனங்களின் உரிமையாளா்களுக்கு கோபி நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினா். பேருந்து நிலையத்துக்குள் இடையூறாக வாகனங்கள் நிறுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT