ஈரோடு

கூட்டுறவு பட்டயப் பயிற்சி: 2 தவணையில் கட்டணம் செலுத்தலாம்

17th Aug 2022 10:27 PM

ADVERTISEMENT

 

கூட்டுறவு பட்டயப் பயிற்சியில் சேரும் மாணவா்கள் இரண்டு தவணைகளில் கட்டணம் செலுத்தலாம் என ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் கு.நா்மதா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடப்பு ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சோ்வதற்கான பட்டயப் படிப்பும், அதனுடன் கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீட்டுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இப்பயிற்சியில் சேர பிளஸ் 2 தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பயிற்சி முடித்த பின் தனித்தனியாக மூன்று சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் இப்பயிற்சி ஓராண்டுப் பயிற்சியாக, இரு பருவத் தோ்வுகளாக நடத்தப்படும். இதற்கான பயிற்சிக் கட்டணம் ரூ.18,850. இதனை இரண்டு தவணைகளாக செலுத்திக் கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்பு வரும் 26ஆம் தேதி துவங்க உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT