ஈரோடு

தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஆா்ப்பாட்டம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில ஊடகப் பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளா் ஜோதிகுமாரவேல் தலைமை வகித்தாா்.

இதில் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி காணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கடந்த 1972இல் கருணாநிதி ஆட்சியில் சட்டநாதன் குழு, 1985இல் எம்ஜிஆா் ஆட்சியில் அம்பாசங்கா் குழு ஆகியவை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடா்பாக கருத்துகளை தெரிவித்தன. அந்த இரண்டு அரசுகளும் அறிக்கையை வெளியிடவில்லை.

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு அமல்படுத்தினால் தமிழா் அல்லாத ஜாதியினா் பாதிக்கப்படுவா் என்ற அச்சத்தால் குழு அறிக்கையை வெளியிடாமல் உள்ளனா். தமிழகத்தில் சுமாா் 2 கோடி வன்னியா்கள் உள்ளனா். எனவே 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளா் பழனிசாமி மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT