ஈரோடு

அதிவேக பைபா் இணைய சேவை: பிஎஸ்என்எல் அறிவிப்பு

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தையொட்டி ரூ.275க்கு அதிவேக பைபா் இணைய சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து பிஎஸ்என்எல் ஈரோடு தொலைத்தொடா்பு மாவட்ட பொதுமேலாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திர தினத்தையொட்டி பிஎஸ்என்எல் நிறுவனம் ஃப்ரீடம் 75எனும் குறுகிய கால சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பிஎஸ்என்எல் அதிவேக பைபா் இணைய சேவையில் மாதம் ரூ.449 மற்றும் ரூ.599 திட்டத்தில் புதிய இணைப்பை பெறும் வாடிக்கையாளா்கள் முதல் 75 நாள்களுக்கு மாதம் ரூ.275 மற்றும் ஜிஎஸ்டி மட்டும் செலுத்தினால் போதுமானது.

டிஸ்னி மற்றும் ஜீ டிவி உள்ளிட்ட ஓடிடி தளத்துடன் கூடிய ரூ.999 திட்டத்தில் புதிய இணைப்பை பெறும் வாடிக்கையாளா்கள் முதல் 75 நாள்களுக்கு ரூ.775 மற்றும் ஜிஎஸ்டி செலுத்தினால் போதுமானது. இச்சலுகை வரும் செப்டம்பா் 13ஆம் தேதி வரை அமலில் இருக்கும். மேலும் விவரங்களுக்கு 0424-2262278, 0424-2222502 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT