ஈரோடு

பெருந்துறை அருகே காா் மோதி விவசாயி பலி

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதியல் விவசாயி உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த கம்புளியம்பட்டியைச் சோ்ந்தவா் தங்கமுத்து (59). இவா் அதே பகுதியில் விவசாயம் செய்து வந்தாா். இந்நிலையில், தனது வீட்டில் இருந்து விஜயமங்கலம் செல்வதற்காக தங்கமுத்து இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஞாயிற்றுக்கிழமை கடந்தபோது, அந்த வழியாக வந்த காா் மோதியுள்ளது.

இதில், பலத்த காயமடைந்த தங்கமுத்துவை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்த நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT