ஈரோடு

பெருந்துறை அருகே காா் மோதி முதியவா் பலி

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே பொன்காளிவலசைச் சோ்ந்த குழந்தைசாமி மகன் ராமலிங்கம்(40). விவசாயி. இவா் தனது உறவினரான ஈரோடு மாவட்டம், எழுமாத்தூா், செல்லாத்தாபாளையத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் சந்திரசேகரன் (60) என்பவரை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறை நேக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை பெத்தாம்பாளையம் பிரிவு அருகே வரும்போது, பின்னால் வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ராமலிங்கம், சந்திரசேகரன் ஆகியோரை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சந்திரசேகரன் உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT