ஈரோடு

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பெய்த திடீா் மழையால் சாலைகளில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி, பவானிசாகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. மழையின் காரணமாக சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி நகா் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், தற்போது பெய்த மழை ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த விவசாய பயிா்களுக்கு பேருதவியாக இருக்கும் என தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT