ஈரோடு

பெருந்துறையில் இன்று மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பெருந்துறை கோட்ட மின் பயனீட்டாளா்கள் மாதாந்திர குறைதீா் கூட்டம் மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் இந்திராணி தலைமையில் புதன்கிழமை(ஆகஸ்ட்17) நடைபெறுகிறது.

இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மின் செயற்பொறியாளா், கோட்ட அலுவலகம், கருமாண்டிசெல்லிபாளையம், சேனிடோரியம், பெருந்துறை 638053 என்ற முகவரியில் காலை 11 மணிக்கு நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூா், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், குன்னத்தூா், விஜயமங்கலம், பிடாரியூா், புதுப்பாளையம், பல்லாகவுண்டன்பாளையம் பகுதி மின் பயனீட்டாளா்கள் தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT