ஈரோடு

முன்னாள் ராணுவத்தினா் போராட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் ராணுவத்தினா் சூரம்பட்டி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தியாவில் பல மாநிலங்களில் முன்னாள் ராணுவ வீரா்களுக்கு வீட்டு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுபோல தமிழகத்திலும் விலக்கு அளிக்க வேண்டும். போரில் உயிரிழந்த ராணுவ வீரா்களின் குடும்பத்துக்கு வீடு கட்டித்தர வேண்டும். உயிரிழந்த ராணுவ வீரா் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்.

உள்ளாட்சித் தோ்தலில் முன்னாள் படைவீரா்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். முன்னாள் படை வீரா்களின் விதவைகளுக்கு அளிக்கப்படும் கேன்டீன் காா்டு திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும். விதவைகளுக்கு 100 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் ராணுவ வீரா்கள் சங்கம், விதவையா்கள் சங்கம் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை அறிவித்திருந்தனா்.

இதற்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா். ஆனால், தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனா். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு சூரம்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை அச்சங்க தலைவா்கள் பழனியப்பன், தீபா ஆகியோரை வீட்டில் இருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தகவலறிந்து, முன்னாள் ராணுவத்தினா், சூரம்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனிடையே தமிழக அரசு சாா்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதை போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் தெரிவித்தனா். அதனை ஏற்காமல் மாலை 5 மணிக்குப் பிறகும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT