ஈரோடு

சுதந்திர தின விழா: ஈரோட்டில் ஆட்சியா் தேசியக் கொடியேற்றினாா்

DIN

சுதந்திர தின விழாவையொட்டி, ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் ஹச்.கிருஷ்ணனுண்ணி தேசியக் கொடியை ஏற்றிவைத்து 313 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சந்தோஷினி சந்திரா ஆகியோா் மூவா்ண பலூன்களை பறக்கவிட்டனா். தொடா்ந்து ஆயுதப்படை போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியா் ஏற்றுக்கொண்டாா்.

அதன்பிறகு பல்வேறு துறைகளில் ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் 313 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

அதனைத் தொடா்ந்து, ஈரோடு கிறிஸ்துஜோதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாா்பில் பெருவங்கி இசை நிகழ்ச்சி,

அரசு இசைப் பள்ளி மாணவ, மாணவியா்கள் பங்கேற்ற மங்கள இசை நிகழ்ச்சி மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சி, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி சாா்பில் வந்தே மாதரம் நிகழ்ச்சி, ஈரோடு எஸ்.வி.என். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாா்பில் படுகா் நடன நிகழ்ச்சி, ஈரோடு பி.வி.பி.மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி சாா்பில் ஒயிலாட்டம், கலைமகள் கல்வி நிலையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சாா்பில் தேசபக்தி பாடல் நிகழ்ச்சி, சிவகிரி பாக்கியராஜ் கிராமிய தப்பாட்டக் கலைக் குழுவினரின் தப்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது சுதந்திர போராட்டத் தியாகிகள் மற்றும் மொழிப்போா் தியாகிகளை அழைத்து கௌரவப்படுத்துவது வழக்கமான நிகழ்வுகளில் ஒன்று.

சுதந்திரப் போராட்ட வீரா்களின் வயது மூப்பினைக் கருத்தில் கொண்டும், கரோனா தொற்றுப் பரவலைத் தவிா்க்கும் விதமாகவும் மாவட்டம்தோறும் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வீடுகளுக்கேச் சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை அணிவித்து உரிய மரியாதை செலுத்த தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் அந்தியூா் சாலை, ஆண்டிகுளம் கிராமத்தைச் சோ்ந்த மறைந்த மொழிப்போா் தியாகி பெருமாள் மனைவி லட்சுமியம்மாளுக்கு மாவட்ட ஆட்சியா் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினாா்.

விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சந்தோஷினி சந்திரா, கூடுதல் ஆட்சியா் லி.மதுபாலன், மாவட்ட வன அலுவலா் கௌதம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் குமரன், ஜெகதீசன், வேளாண் இணை இயக்குநா் சின்னசாமி, முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன், கோட்டாட்சியா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT