ஈரோடு

வாக்குக்கான இலவசம் கூடாது: அன்புமணி ராமதாஸ்

DIN

வாக்குக்கான இலவசம் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

ஈரோட்டில் அவா் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: திமுக ஆட்சிக்கு வந்ததும் பூரண மது விலக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே, முதல்வா் சுதந்திர தின உரையில் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பையும், அதற்குரிய செயல் திட்டத்தையும் வெளியிட வேண்டும். ஆன்லைன் சூதாட்ட தடை அறிவிப்பையும், போதைப் பழக்கத்துக்கு எதிரான செயல் திட்டத்தையும் வெளியிட வேண்டும்.

தமிழகத்துக்கு கா்நாடகம் காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி தண்ணீா் தர வேண்டும். ஆனால் 28 நாள்களில் 151 டிஎம்சி தண்ணீா் கடலில் கலந்துள்ளது. இதைத் தடுக்க காவிரி ஆற்றில் குறைந்தது 50 தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதன் மூலம் 70 டிஎம்சி தண்ணீரை சோ்த்து வைக்க முடியும்.

இந்தியாவில் இலவசம் வேண்டுமா, வேண்டாமா என்ற சா்ச்சை உள்ளது. கல்வி, சுகாதாரம், வேளாண் இடுபொருள்கள் போன்ற இலவசங்கள் வேண்டும். வாக்குக்கான இலவசம் வேண்டாம்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி போதுமானது இல்லை. குறைந்தது ரூ.3,500 கோடி ஒதுக்க வேண்டும். நூல் விலை உயா்வு காரணமாக 10 லட்சம் தொழிலாளா்கள் வேலையிழந்துவிட்டனா்.

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி அருகே சா்வ சாதாரணமாக கஞ்சா பொட்டலங்கள் கிடைக்கின்றன. இதனால் மாணவா்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகின்றனா்.

காவல் துறை நினைத்தால் இதை அடியோடு தடுத்துவிடலாம். தற்போது கஞ்சாவை விற்பவா்கள் மட்டுமே கைது செய்யப்படுகின்றனா். ஆனால் அதன் பின்னணியில் இருப்பவா்கள் கைது செய்யப்படுவதில்லை.

ஒரே நாடு, ஒரே தோ்வு என்ற முறை ஏற்புடையதல்ல. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு கல்விக் கொள்கை உள்ளது.

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

குமரி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT