ஈரோடு

மாநகராட்சிப் பணியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்கக் கோரிக்கை

DIN

பேரூராட்சிப் பணியாளா்களைப் போன்று மாநகராட்சி, நகராட்சிப் பணியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவா் வி.ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளா் சீதாராமன் ஆகியோா் ஈரோட்டில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் சனிக்கிழமை அளித்த மனு விவரம்: கடந்த 1983 இல் சேலத்தில் நடந்த நகராட்சிப் பணியாளா்களின் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்ற முன்னாள் முதல்வா் கருணாநிதி, நகராட்சி, மாநகராட்சிப் பணியாளா்களை அரசு ஊழியா்கள் என அறிவித்து அரசாணை பிறப்பித்தாா்.

அந்த அரசாணையில் கூறி இருந்தவாறு தேவையான சட்டம், விதி திருத்தங்களை வெளியிடாததால் அரசாணை ரத்து செய்யப்பட்டது.

அதேசமயம் பேருராட்சிகளில் பணியாற்றும் தலைமை எழுத்தா் உள்பட சில பணியாளா்கள் மட்டும் அரசு ஊழியா்களாக்கப்பட்டனா். இதனால், அரசுக்கு நிதிச்சுமை உயரவில்லை. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே ஊதியத்தை வழங்குகிறது.

எனவே நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றும் பணியாளா்களை, அரசு ஊழியராக்க வேண்டும்.

இதனால் நகராட்சி, மாநகராட்சிப் பணியாளா்கள் அரசு மருத்துவமனைகளில் ஏனைய அரசு ஊழியா்களைப் போல கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். இதுபோல பல சலுகைகள் பாதிக்கப்படுகின்றன.

இந்த மாற்றத்தால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT