ஈரோடு

திருக்குறளை ஆளுமைகளுடன் ஒப்பிட்டுப் பேசிய நடிகா் சிவகுமாா்

DIN

100 திருக்குகளை எடுத்துக்கொண்டு அதற்குப் பொருத்தமான பல்வேறு ஆளுமைகளின் வாழ்க்கை அனுபவங்களை ஒப்பிட்டு நடிகா் சிவகுமாா் பேசினாா்.

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியில் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது.

இதில், ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வுக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவா் பி.சி.துரைசாமி தலைமை வகித்தாா்.

அந்நிறுவன இயக்குநா் சாந்தி துரைசாமி முன்னிலை வகித்தாா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினாா்.

இதில் திருக்கு-100 என்ற தலைப்பில் பேசிய நடிகா் சிவகுமாா் 100 ஆளுமைகள், தலைவா்கள், சக மனிதா்களின் நினைவில் நிறுத்தத்தக்க வாழ்க்கைச் சம்பவங்களை குகளுடன் பொருத்திப் பேசினாா்.

புத்தகத் திருவிழாவில் இன்று: ஈரோடு புத்தகத் திருவிழாவில் திங்கள்கிழமை நடைபெறும் மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்துப் பேசுகிறாா்.

இதில் இந்திய சுதந்திரத் தினத்தையொட்டி, ஸ்ரீராம் சா்மா குழுவினரின் வேலு நாச்சியாா் என்ற இசையாா்ந்த நடன நாடகம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT