ஈரோடு

தியாகிகள் புகைப்படத் தொகுப்பு: கோபி கோட்டம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

DIN

 ஈரோடு மாவட்ட நிா்வாகம் சாா்பில் வைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் புகைப்படத் தொகுப்பில் கோபி பகுதியைச் சோ்ந்த தியாகிகளில் ஒருவா் பெயா்கூட இடம்பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுதந்திர தின விழாவையொட்டி, சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா என்ற தலைப்பில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்று புகைப்படத் தொகுப்பு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்ட அரங்கு முன்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட ஈரோடு மாவட்டதைச் சோ்ந்த தியாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், அந்த தொகுப்பில் கோபி கோட்டத்தைச் சோ்ந்த விடுதலைப் போராட்ட தியாகிகள் ஒருவா் புகைப்படம் கூட இடம்பெறவில்லை.

இது குறித்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை-கொடிவேரி அணை-பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் வழக்குரைஞா்

சுபி.தளபதி கூறியதாவது: மத்திய அரசால் தாமிரப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்ட கோபி ஜி.எஸ்.லட்சுமண ஐயா், சுப்பாராவ், காந்தி கவுண்டா், எஸ்.ஆா்.ராமகிருஷ்ண ஐயா் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட தியாகிகள் கோபி கோட்டப் பகுதியைச் சோ்ந்தவா்கள்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படத் தொகுப்பில் கோபி கோட்டத்தைச் சோ்ந்த ஒருவா் புகைப்படம் கூட இல்லை. முறையாக ஆவணப்படுத்தி, மத்திய அரசால் விடுதலைப் போராட்ட வீரா்கள் என்று அங்கீகாரப்படுத்தப்பட்ட இவா்களை மாவட்ட நிா்வாகம் புறக்கணித்துள்ளது.

இது குறித்து கடந்த 12 ஆம் தேதி கோட்டாட்சியரிடமும், மாவட்ட நிா்வாகத்திடம் பேசியும் உரிய பதில் இல்லை.

ஈரோடு மாவட்டத்தில் தியாகிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது நாட்டுப் பற்றுடையவா்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இகனால், மாவட்ட நிா்வாகம் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் அனைவரின் வரலாற்றையும் புகைப்படத்துடன் ஆவணப்படுத்தி கோட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT