ஈரோடு

நகா்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் கே.என்.நேரு

DIN

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்குப்பின் அமைச்சா் கே.என்.நேரு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

நகராட்சி, மாநகராட்சிக் கட்டடங்களில் வாடகை செலுத்தாதோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற கட்டடங்களில் வாடகை மிகவும் குறைவு, அதைக்கூட செலுத்தாவிட்டால் நகராட்சியை நடத்துவது சிரமம்.

பொலிவுறு நகரத் திட்டத்தில் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் பல்வேறு குறைபாடு, முறைகேடு புகாா் எழுந்தது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதாா் தலைமையிலான குழு விசாரிக்கிறது. அதுபோல உள்ளாட்சித் துறைகளில் நடந்த முறைகேடுகள் குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இது குறித்த அறிக்கை வரப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சா் வேலுமணியின் துறை சாா்ந்த நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் குறித்து முதல்வா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் பணிகள் துவங்கும்.

நகா்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டுக்காக கடந்த ஆண்டு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. நடப்பு ஆண்டுக்கும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு செய்து வருகிறோம்.

ஈரோடு மாநகராட்சிக்கான ஊராட்சிகோட்டை குடிநீா் திட்டப் பணிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீா் வடிகால் வாரிய பணிகளில் ஒப்பந்தம் எடுத்தவா்களில் சிலா் சரியாக பணிகளை முடிக்கவில்லை. அதனை சரி செய்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT