ஈரோடு

ஈரோடு புத்தகத் திருவிழா: வாசகர்களின் தேடலில் முதலிடம் பிடித்த பொன்னியின் செல்வன் நாவல்

கே.விஜயபாஸ்கா்

ஈரோடு புத்தகத் திருவிழாவில் பொன்னியின் செல்வன் நாவல் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இந்த நாவலை அதிகமாக வாங்கிச்செல்கின்றனர்.

18ஆவது ஈரோடு புத்தகத் திருவிழா கடந்த 5 ஆம் தேதி தேதி தொடங்கியது. மக்கள் சிந்தனைப் பேரவை சார்பிவ் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா வரும்16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இந்த புத்தகக் கண்காட்சியில் 2 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 230 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 150 பதிப்பாளர்கள் கலந்து கொண்டு கண்காட்சியில் 10 முதல் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் புத்தகங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதில் வரலாற்று புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என பல்வேறு வகையிலான புத்தகங்கள் புத்தகத் திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.  அதேபோல மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான புத்தகங்களும் அதிகளவில் இடம் பெற்றுள்ளன.  பல்வேறு புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள், பிரபலமான நூல்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு வரலாற்று புத்தகங்கள் விற்பனையாகிறது. கரோனா தாக்கத்தால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புத்தக கண்காட்சி நடைபெறுவதால் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. காலை முதல் இரவு வரை தொடர்ந்து வாசகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த ஆண்டு வரலாற்று புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையானது. குறிப்பாக பொன்னியின் செல்வன் புத்தகத்தை அதிகமாக வாங்கிச் செல்கின்றனர். மக்கள் வரலாற்றை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். வழக்கமாக நாவல்கள் கதைகள் விற்பனையாகும். ஆனால் தற்போது வரலாற்று புத்தகங்கள் விற்பனையாவதால் தமிழர்களின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வாங்கலாம், சோழ மன்னர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டுவது போல் உள்ளது. ஏறத்தாழ 100 அரங்குகளில் பொன்னியின் செல்வன் புத்தகம் வைக்கப்பட்டிருந்து. 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழப் பேரரசின் வரலாற்றை அடிப்படையகாக் கொண்ட இந்த நாவல் காகிதத்தின் தரத்தைப்பொறுத்து குறைந்தது ரூ.450 முதல் அதிகபட்சமாக ரூ.3,500 வரை விற்கப்படுகிறது.

ஆயில் பேப்பரில் வண்ணப் படங்களுடன் கூடிய பொன்னியின் செல்வன் நாவல் ரூ.3,500க்கு விற்கப்படுகிறது. வரலாற்று மற்றும் சமூக நாவல்களை வாசிப்பவர்கள் பொன்னியின் செல்வன் நாவலை வாங்கிச்செல்வது வழக்கம். ஈரோடு புத்தகத் திருவிழாவில் அனைத்து தரப்பு வாசகர்கள் மட்டுமல்லாது, பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த நாவலை விரும்பிக்கேட்டு வாங்கிச்செல்கின்றனர். 5 பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவல் தினமும் 100 முதல் 200 தொகுப்புகள் வரை விற்பனையாகின்றன. இத்திருவிழா முடிவடைய இன்னும் 3 நாள்கள் உள்ள நிலையில் சுமார் 3,000 தொகுப்புகளாவது விற்பனையாக வாய்ப்புள்ளது. இந்த நாவலுக்கு 20 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தைச் சேர்ந்த பூமிநாதன் கூறியதாவது; மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, கார்த்திக், விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி ஆகியோர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதன் தாக்கம் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதனால் முன்னெப்போதும் அளவுக்கு பொன்னியின் செல்வன் நாவல் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இந்த நாவலை வாங்கிச்செல்கின்றனர் என்றனர்.  
 அது போல் சாண்டியல்யன், கோவி.மணிசேகரன் உள்ளிட்ட வரலாற்று நாவல்களும் அதிகம் விற்பனையானது. அதுபோல் சு.வெங்கடேஷன் எழுத்திய வேல்பாரி புத்தகங்களும் அதிகளவில் விற்பனையாகிறது என பதிப்பகத்தார் தெரிவித்தனர். இதுகுறித்து வாசகர்கள் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகக் கண்காட்சி நடைபெற்றதால் ஆவலுடன் நிறைய புத்தகங்கள் வாங்கியுள்ளோம். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரவுள்ள நிலையில் வரலாறு குறித்து அறிந்துகொள்ள பொன்னியின் செல்வன் நாவலை வாங்கி செல்கிறோம். வரலாற்றுப் புத்தகங்கள் படிப்பதன் மூலம் தமிழர்களின் வீரம், கலைகள் குறிந்து அறிந்துகொள்ள முடியும். இது போன்ற புத்தக கண்காட்சிகளை அடிக்கடி நடத்த வேண்டும் என்றனர்.

தமிழ்நாடு அரசுப் பாடநூல் அரங்கில் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் வரலாறு, சங்க கால வாழ்வியல் குறித்த நூல்கள் ஏராளமாக விற்பனையாகி வருகின்றன. தொல்லியல் துறை கொடுமணல் குறித்த தனி காட்சி அரங்கு அமைத்துள்ளதால், கொடுமணல் குறித்த தேடலும் அரங்கில் அதிகரித்துள்ளது.
 ஈரோடு புத்தகத் திருவிழாவில் வரலாற்று நூல்களுக்கு இணையாக ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான நூல்கள் விற்பனையும் அதிகமாக இருந்தது. பள்ளி
மாணவர்களைப் பொறுத்தவரை ரூ.10க்கு விற்கப்படும் திருக்குறள் நூலை அதிகமாக வாங்கிச்செல்கின்றனர்.  ரூ.25க்கு விற்பனையாகும் தாமஸ் ஆல்வா எடிசன், அப்துல்கலாம், விவேகானந்தர், ஜி.டி.நாயுடு உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் குறித்த நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன. இதுபோல் ஓவிய நூல்கள், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, ஆங்கிலக் கதை நூல்கள், தமிழில் மேஜிக், தன்னம்பிக்கை நூல்களும் ஓரளவு விற்பனையாகின என புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT