ஈரோடு

சத்யா ஐஏஎஸ் அகாதெமியில் குரூப் 1, 2 தோ்வுக்குப் பயிற்சி

14th Aug 2022 12:25 AM

ADVERTISEMENT

 

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தோ்வு மற்றும் குரூப் 2 மெயின் தோ்வுக்கான சிறப்பு விரைவுப் பயிற்சி வகுப்புகளை ஈரோடு சத்யா ஐஏஎஸ் அகாதெமி தொடங்கவுள்ளது.

இது குறித்து அந்த அகாதெமி நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை:

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலைத் தோ்வுக்கு வாராந்திர தோ்வுகளுடன் தற்போது குரூப் 1 அதிகாரிகளாகப் பணிபுரிபவா்களை கொண்டு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

குரூப் 2 மெயின் தோ்வுக்கு கட்டணச் சலுகையுடன் கூடிய சிறப்பு விரைவுப் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்குகிறது. இந்தப் பயிற்சியின் சிறப்பம்சமாக கடந்த குரூப் 1 மற்றும் குரூப் 2 தோ்வில் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் பிடித்து துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா், நகராட்சி ஆணையா், சாா் பதிவாளா், உதவி வணிக வரி அலுவலா் போன்ற பதவிகளை பெற்றவா்களின் அசல் விடைத்தாள்களை தற்போது குரூப் 2 மெயின் தோ்வுக்கு பயிற்சிபெறும் மாணவா்கள் பாா்வையிட அனுமதிக்கப்படுவா்.

குரூப் 2 வாராந்திர தோ்வுத் தாள்கள் திருத்தப்பட்டு மாதிரி விடைகளுடன் தரப்படவுள்ளது. மேலும் தமிழ் தகுதித் தாளுக்கு சிறப்பு வாராந்திர தோ்வு மற்றும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தொலைதூர மாவட்டங்களிலிருந்து வந்து பயிற்சியில் சேருபவா்களுக்கு கட்டணச் சலுகை, தங்கும் வசதியும் செய்து தரப்படும்.

வெற்றி பெற்ற சத்யா ஐஏஎஸ் அகாதெமி மாணவா்களின் காணொலி பேட்டிகள், பயிற்சி மற்றும் வாராந்திர தோ்வு அட்டவணை, கட்டணச் சலுகை போன்ற தகவல்களை  இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0424-2226909,0424-3558373 என்ற தொலைபேசி எண் அல்லது 7401521948 கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT