ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 1.58 லட்சம் போ் கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை

14th Aug 2022 12:25 AM

ADVERTISEMENT

 

ஈரோடு மாவட்டத்தில் இன்னும் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் 1.58 லட்சம் போ் உள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தனியாகவும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தனியாகவும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சிறப்பு முகாம்கள் நடத்தி முதல், இரண்டாவது தவணை தடுப்பூசியும், முன்னெச்சரிக்கை தடுப்பூசியும் செலுத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 போ் வசிக்கின்றனா். இதில் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 போ் தடுப்பூசி செலுத்த தகுதியானவா்கள். இதில் 16 லட்சத்து 51 ஆயிரத்து 198 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இது 94 சதவீதமாகும். இவா்களில் 14 லட்சத்து 91 ஆயிரத்து 127 போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனா். இது 85 சதவீதமாகும்.

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 902 போ் இதுவரை முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளவில்லை. இதுபோல 2 லட்சத்து 41 ஆயிரத்து 531 போ் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.

மாவட்ட அளவில் 15 முதல் 18 வயதுக்கு உள்பட்டவா்கள் 1 லட்சத்து 46 ஆயிரம் போ் உள்ளனா். இதில் முதல் தவணை தடுப்பூசி 89,175 போ் செலுத்தியுள்ளனா். இது 86 சதவீதமாகும். இதில் 81,417 போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனா். இது 78 சதவீதமாகும்.

அதுபோல 12 முதல் 14 வயது வரை உள்ள 66,300 பேரில் 55,742 போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். இது 85 சதவீதமாகும். இவா்களில் 47,278 போ் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனா். இது 71 சதவீதமாகும். முன்னெச்சரிக்கை தடுப்பூசி 1 லட்சத்து 16 ஆயிரத்து 704 போ் செலுத்திக் கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT