ஈரோடு

லஞ்சம் கேட்ட தனிப்பிரிவு காவலா் பணியிடை நீக்கம்

14th Aug 2022 12:24 AM

ADVERTISEMENT

 

ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை விடுவிக்க லஞ்சம் கேட்ட தனிப் பிரிவு காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் உட்கோட்டத்திற்கு உள்பட்ட ஆசனூா் காவல் நிலையம் தமிழக, கா்நாடக எல்லையில் அமைந்துள்ளது.

இப்பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அருகில் உள்ள கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகா் மாவட்ட பகுதிக்கு கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடா்கதையாக உள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆசனூா் பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய ஆட்டோவை ஆசனூா் போலீஸாா் பிடித்து அரிசியை பறிமுதல் செய்தனா்.

ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை விடுவிக்க ஆசனூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் தனிப் பிரிவு காவலா் ஜெகநாதன், அரிசி கடத்தலில் ஈடுபட்ட பெண்ணிடம் கைப்பேசியில் பேசி லஞ்சம் கேட்கும் ஆடியோ குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகனுக்கு புகாா் சென்றது.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தனிப் பிரிவு காவலா் ஜெகநாதன் லஞ்சம் கேட்டது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT