ஈரோடு

விளிம்பு நிலை மக்களுக்கான திறன் வளா்ப்பு பயிற்சி முகாம்

13th Aug 2022 01:16 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலத்தை அடுத்த கொமராபாளையம் ஊராட்சியில் விளிம்பு நிலை மக்களுக்கான திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி தொடக்கிவைத்தாா். இதில், செயற்கை ஆபரணங்கள் தயாரித்தல் பயிற்சி 35 பெண்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் லிமா அமிலினி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கே.சி.பி.இளங்கோ, ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.எம்.சரவணன், வட்டாட்சியா் ரவிசங்கா், உதவி திட்ட அலுவலா் அன்பழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேம்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் சத்யா பழனிசாமி, துணைத் தலைவா் ரமேஷ் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT