ஈரோடு

சுதந்திர தினம்: பெருந்துறை அரசுப் பள்ளியில் 75 மரக்கன்றுகள் நடவு

13th Aug 2022 01:18 AM

ADVERTISEMENT

75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை 75 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

பள்ளி விவசாயத் துறை மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியை, தலைமையாசிரியா் ரவிசந்திரன் தொடக்கிவைத்தாா். பள்ளி வளாகத்தில் 75 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

மேலும், பள்ளியில் உற்பத்தி செய்யப்பட்ட 75 மரக்கன்றுகளை, பெருந்துறை வட்டார வள மையம் மூலமாக ஈரோடு புத்தகத் திருவிழா கண்காட்சிக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் விவசாய ஆசிரியா் கந்தன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT