ஈரோடு

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயிலில் திரண்ட பக்தா்கள்

13th Aug 2022 01:17 AM

ADVERTISEMENT

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, பெருந்துறை பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல, பெருந்துறை, குன்னத்தூா் சாலையிலுள்ள செல்லாண்டியம்மன் கோயிலில், அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பெருந்துறை ஓம் சக்தி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT