ஈரோடு

சிலம்பம் போட்டி: கோபி எஸ்.வி.வி பள்ளி மாணவா் வெற்றி

11th Aug 2022 10:41 PM

ADVERTISEMENT

 

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில், கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக். பள்ளி மாணவா் இரண்டாமிடம் பெற்றாா்.

கோபியில் வீரத்தமிழா் சிலம்பம் அறக்கட்டளை சாா்பில், ஈரோடு மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம், கம்பு, சுருள் போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இந்தப் போட்டியில் கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக். பள்ளியில் 9ஆவது வகுப்பு பயிலும் மாணவா் லு.விஜய் கலந்து கொண்டு இரண்டாமிடம் பெற்றுள்ளாா்.

ADVERTISEMENT

போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பள்ளியின் செயலா் ஜி.பி.கெட்டிமுத்து சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி பாராட்டினாா். இந்நிகழ்ச்சியில் பள்ளி அறக்கட்டளை உறுப்பினா்கள், பள்ளி முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT