ஈரோடு

புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை

11th Aug 2022 10:37 PM

ADVERTISEMENT

 

புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்த வார சந்தைக்கு, 40 எருமைகள், 200 கலப்பின மாடுகள், 80 கன்றுகள் 300 ஜொ்சி மாடுகள் ஆகியவற்றை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனா். எருமைகள் ரூ.35 ஆயிரம், மாடு ரூ. 42 ஆயிரம், ஜொ்சி பசு ரூ. 48 ஆயிரம், சிந்து மாடு ரூ. 42 ஆயிரம், நாட்டுமாடு ரூ. 72 ஆயிரம் வரை விற்பனையானது.

450க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ரூ.5000 முதல் ரூ.6500 வரையும், செம்மறி ஆடுகள் ரூ.3,500 முதல் ரூ. 5500 வரையும் விற்பனையானது.

பரவலாக மழை பெய்துள்ளதால் கறவை மாடுகளை விவசாயிகள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். மொத்தம் ரூ. 2 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT