ஈரோடு

அரசு விடுதிகளில் சேர கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

அரசு விடுதிகளில் சேர விரும்பும் கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட்12) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பள்ளி மாணவியா்களுக்கென அவல்பூந்துறை, கொடுமுடி, சிவகிரி, பெருந்துறை, அத்தாணி, காவிலிபாளையம், குருவரெட்டியூா், மூங்கில்பட்டி, பவானி, சத்தியமங்கலம், பங்களாபுதூா் ஆகிய 11 இடங்களில் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இப்பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள பள்ளி மாணவிகளுக்கான இடங்களை கல்லூரி மாணவிகளைக் கொண்டு நிரப்பிட அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளி மாணவிகள் விடுதிகளில் காலியாக உள்ள இடங்களுக்குத் தகுதியான கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இவ்விடுதிகளில் கல்லூரி மாணவிகளுக்கு இலவசமாக உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படுகிறது. விடுதிகளில் சேரும் மாணவிகளின் பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

எனவே, தகுதியுடைய கல்லூரி மாணவிகள், இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை மாலைக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT