ஈரோடு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் சில்லறை வியாபாரம் அதிகரிப்பு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு ஜவுளிச் சந்தையில் சில்லறை வியாபாரம் சற்று அதிகமாக இருந்தது.

ஈரோடு ஜவுளிச் சந்தை வாரம்தோறும் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற வெளிமாநிலங்களிருந்தும் வியாபாரிகள் வருகின்றனா்.

கா்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அந்த மாநில வியாபாரிகள் வரவில்லை. கேரள மாநிலத்தில் அடுத்த மாதம் ஓணம் பண்டிகை வர உள்ளதால் அந்த மாநிலத்திலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்ததால் சில்லறை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா். இந்த வாரம் 35 சதவீதம் அளவுக்கு சில்லறை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT