ஈரோடு

வெப்பிலியில் ரூ. 82 ஆயிரத்துக்கு தேங்காய்கள் ஏலம்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சென்னிமலை, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 82 ஆயிரத்துக்கு தேங்காய்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 7 ஆயிரத்து 574 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். தேங்காய் கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.19.06க்கும், அதிகபட்ச விலையாக ரூ.25.70க்கும் ஏலம் போனது. மொத்தம் 3 ஆயிரத்து 293 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ. 82 ஆயிரத்து 177க்கு விற்பனையானது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT