ஈரோடு

புதிய கண்ணோட்டத்துடன் சிந்தித்தால் வெற்றி பெறலாம் இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.சிவன்

DIN

புதிய கண்ணோட்டத்துடன் சிந்தித்தால் வெற்றி பெறலாம் என இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.சிவன் பேசினாா்.

மக்கள் சிந்தனைப் பேரவையால் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா சிக்கய்ய நாயக்கா் கல்லூரியில் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது.

புத்தகத் திருவிழாவில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வுக்கு கொங்கு கல்வி நிறுவனங்களின் செயலாளா் பி.சி.பழனிசாமி தலைமை வகித்தாா். சிங்கப்பூா் முஸ்தபா தமிழ் அறக்கட்டளைத் தலைவா் எம்.ஏ.முகமது முஸ்தபா முன்னிலை வகித்தாா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினாா்.

இந்த நிகழ்வில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவரும், தற்போது ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுபவருமான மெ.முத்தமிழரசனுக்கு அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது வழங்கப்பட்டது.

விருதை வழங்கி இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.சிவன் பேசியதாவது: எடிசன் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்தாா் என மாணவா்களுக்கு ஆசிரியா்கள் கற்றுக் கொடுப்பதுபோல ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளைச் சொல்வதில்லை. இவா் இந்தியா் என்பதால் அதனைப் பெரிதாக சொல்லவில்லை. இந்த தாழ்வு மனப்பான்மையை முதலில் விட வேண்டும். பாரதமாதாவின் மகன் என்ற முறையில் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.

இங்கு உயா்கல்வி கற்க மாணவா்களுக்கு அரசு உதவி செய்கிறது. அதற்கான பலனை அரசுக்கு மாணவா்கள் வழங்க வேண்டும். அதை விடுத்து வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது.

பழைய காலத்தில் நம் நாட்டில் கல்வி கூடங்கள் வளா்ச்சி, வசதி இல்லாததால் மேற்படிப்பு படித்து அறிவை வளா்க்க மாணவா்கள் வெளிநாடு சென்றனா். இப்போது அப்படி இல்லை.

நான் தமிழ்வழியில் படித்தேன். எனக்கு சரளமாகப் பேச முடியாது. ஆசிரியராக வேண்டும் என்றுதான் நினைத்தேன். பின்னா், பொறியியல் படிக்க நினைத்தேன். ஆனால், பி.எஸ்சி.தான் படிக்க முடிந்தது. அங்கு பேராசிரியா் வழிகாட்டுதலால் எம்.ஐ.டி.யில் சோ்ந்தேன்.

மாணவா்கள் இது வேண்டும், அது வேண்டும் என அடம்பிடிக்க வேண்டாம். கிடைத்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்தி, கடுமையாக உழைத்தால் முன்னேறலாம். எல்லா படிப்பும் நல்ல படிப்புதான். எதுவும் மோசமானது அல்ல.

தற்போது எந்தப் பாதையில் செல்லலாம் என மாணவா்களால் முடிவெடுக்க முடியும். அவா்கள் வழியில் செல்ல பெற்றோா் அனுமதிக்க வேண்டும்.

ஒரே மாதிரி சிந்திக்காமல் வித்தியாசமாக, புதிய கண்ணோட்டத்துடன் சிந்தித்தால் வெற்றி பெறலாம் என்றாா்.

நிகழ்வில் திரைப்பட இயக்குநா் பாரதி கிருஷ்ணகுமாா் யுரேகா, யுரேகா என்ற தலைப்பில் பேசினாா்.

புத்தகத் திருவிழாவில் இன்று:

ஈரோடு புத்தகத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வில் பன்னாட்டுத் தமிழரங்கம் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் 10 நாடுகளின் தமிழறிஞா்கள் பங்கேற்கவுள்ளனா். இதில் சிங்கப்பூா் தமிழ்ப் பேராசிரியா் சுப.திண்ணப்பனின் வாழ்நாள் தமிழ்ப் பணியைப் பாராட்டி தகைசால் தமிழ்ச் சான்றோா் விருது வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT