ஈரோடு

மின் வாரிய பொறியாளா்கள், ஊழியா்கள் போராட்டம்

9th Aug 2022 12:44 AM

ADVERTISEMENT

மக்களவையில் மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்வதை கண்டித்து ஈரோட்டில் தமிழ்நாடு மின் வாரிய ஊழியா்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு மின் வாரிய பொறியாளா் கழகம் சாா்பில் உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மின்சார சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடாது.

அதனை விவாதித்தல், நிறைவேற்றுதல் கூடாது. சட்டத் திருத்தம் செய்யப்பட்டால் மின் விநியோகம் முழு அளவில் தனியாா் வசம் சென்றுவிடும் என்பதால் இதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.

உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின் வாரிய பொறியாளா் கழக மாநிலச் செயலாளா் இந்திராணி தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

மின் வாரிய ஊழியா்கள் கூட்டமைப்பு மண்டலச் செயலாளா் ஜோதிமணி மற்றும் நிா்வாகிகள் பேசினா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT